கோலாலம்பூர், டிச 9 – KLIA அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது முனையங்களில் 40 தானியங்கி ஆட்டோகேட் (Autogate) கூடுதலாக இவ்வாண்டு இறுதிக்குள் ஏற்படுத்தப்படும்.
அந்த கூடுதல் ஆட்டோ கேட்களில் (kod) QR குறியீடு ஸ்கேன் பொருத்தப்பட்டுள்ளதாக மலேசிய குடிநுழைவுத் தறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஷக்கரியா ஷாபான் ( Zakaria Shaaban ) தெரிவித்தார்.
இதுவரை அந்த இரண்டு முனையங்களிலும் 54 ஆட்டோகேட் உள்ளன, மேலும் வருகை முனையத்தில் 10 ஆட்டோகேட்டுகளும் விமானம் புறப்படும் முனையங்களில் கூடுதலாக 10 ஆட்டோகேட்டும் பொருத்தப்படும்.
ஒருவர் ஆட்டோ கேட்டை கடக்க 10 முதல் 15 வினாடிகள் வரை எடுத்துக்கொள்கிறார், இந்த QR குறியீட்டைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் 5 வினாடிகளுக்குள் அதனை படிக்கலாம் அல்லது அல்லது கடந்து செல்லலாம் என Zakaria கூறினார்.
KLIA விமான நிலையத்தின் இரண்டு முனையங்களும் 63 நாடுகளின் சுற்றுப்பயணிகளுக்க திறக்கப்பட்டுள்ளதால் அதன் ஆட்டோகேட் நெரிசலாக இருப்பதாக கடந்த வாரம் ஊடகங்களில் தகவல் வெளியானது.