
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 25 – கே.கே சூப்பர்மார்ட் & சூப்பர்ஸ்டோர் சென் .பெர்ஹாட் ( கே.கே சூப்பர் மாட் ) சுபாங் தேசிய கோல்ப் கிளப்பில் நோன்பு துறப்பு நிகழ்வை நடத்தியது. இவ்வாண்டு நோன்பு பெருநாளை முன்னிட்டு வயதானவர்களின் அர்த்தமுள்ள வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் வீடியோவையும் 24 மணி நேரம் செயல்படும் அந்த வர்ததக மையம் தயாரித்திருந்தது.
Kasih Mama அதாவது தாயரின் அன்பை சித்தரிக்கும் வகையில் அந்த வீடியோ தயாரிக்கப்பட்டிருந்தது. டிமென்ஷியா, அல்சைமர் மறதி நோய் அல்லது முதுமை போன்ற நிலைகள் படிப்படியாக உருவாகி கவனிக்கப்படாமல் போவதால், அவை ஒருவரின் மனிதநேயம் மற்றும் மதிப்புகளுக்கு எவ்வாறு சவால் விடும் என்பதை அந்த வீடியோவில் தெளிவாக காட்டப்பட்டிருந்தது.
அல்சைமர் மறதி நோயால் ஒருவர் படும் அவதி குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் கே.கே சூப்பர் மாட்டின் இந்த ஆண்டுக்கான சமூக பொறுப்புணர்வின் ஒரு பங்கேற்பாக இந்த வீடியே அமைந்திருப்பதாக தமதுரையில் கே.கே சூப்பர்மார்ட் & சூப்பர்ஸ்டோர் சென்.பெர்ஹாட்டின் தோற்றுநரும் , நிர்வாக தலைவருமான டத்தோஸ்ரீ KK Chai தெரிவித்தார்.
மேலும் ADFM எனப்படும் மலேசிய Alzheimer நோய் அறநிறுவனம் மற்றும் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றும் கடப்பாட்டையும் கே.கே சூப்பர்மார் & சூப்பர்ஸ்டோர் கொண்டிருப்பதாக கே.கே சாய் கூறினார். இந்த பிரச்சாரத்திற்காக 100,000 ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ADFM அறநிறுவனத்தின் தலைவர் Tan Sri Hasmah Abdullah மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் , மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் ஹெல்தி ஏஜிங் அண்ட் வெல்னஸ் (H-CARE) மையத்தைச் சேர்ந்த டாக்டர் சுமயா மாட் மற்றும் மலேசிய தேசிய பல்கலைக்கழத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.