
காஜாங், பிப்ரவரி-26 – முறையான பெர்மிட் இல்லாமல் 6 சுடும் ஆயுதங்கள் மற்றும் 200 தோட்டாக்களை வைத்திருந்த குற்றத்திற்காக, இஸ்ரேலிய ஆடவனுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு முதன்மைக் குற்றச்சாட்டையும் தேர்வு குற்றச்சாட்டையும் ஒப்புக் கொண்டதை அடுத்து, காஜாங் சிறைச்சாலை நீதிமன்ற வளாகத்தில், 39 வயது Avitan Shalom-முக்கு தனித்தனியாக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும் கைதான நாளான 2024 மார்ச் 28-ஆம் தேதியிலிருந்து அத்தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
6 சுடும் ஆயுதங்களை வைத்திருந்ததாக கடந்தாண்டு ஏப்ரலில் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை Avitam அப்போது மறுத்திருந்தான்.
2024 மார்ச் 26 -ஆம் தேதிக்கும் 28-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், ஜாலான் அம்பாங்கில் உள்ள ஹோட்டல் அறையொன்றில் அக்குற்றங்களைப் புரிந்ததாக Avitam குற்றம் சாட்டப்பட்டிருந்தான்.
எனினும் குற்றச்சாட்டு திருத்தப்பட்டு, அவன் வாக்குமூலத்தை மாற்றிக் கொண்டதை அடுத்து இந்த 7 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது.