
கோலாலம்பூர், டிசம்பர்-14 – மலேசியத் தாய் ஒருவர், தனது சிறுவயது மகன் Move People என்ற ‘சில்மிஷ’ விளையாட்டு செயலியைக் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த விளையாட்டில் ஆண்–பெண் கதாபாத்திரங்களின் கைகளை, கால்களை இயக்கச் செய்யும் வசதி உள்ளது; பல நேரங்களில் அது ஒழுங்கற்ற காட்சிகளாக மாறுகிறது.
கோபத்தில் தாய் கண்டித்தவுடன் சிறுவன் உடனே அந்த செயலியை நீக்கினான்.
இருந்தாலும், பாடம் கற்பிக்கும் நோக்கில் போலீஸ் நிலையத்திற்கே மகனை தாய் அழைத்துச் சென்று விட்டார்.
அங்கு போலீஸார், “இன்றிரவு லாக்கப்பில் இருக்க வேண்டும்” என நகைச்சுவையாக எச்சரித்து அவனை அனுப்பி வைத்தனர்.
அன்றிலிருந்து மகன் கைப்பேசி பக்கமே போவதில்லை என அத்தாய் கூறினார்.
பெற்றோர்கள், குழந்தைகள் பதிவிறக்கும் விளையாட்டுச் செயலிகளை கவனமாக கண்காணிக்க வேண்டும் எனவும் இந்நேரத்தில் அவர் வலியுறுத்தினார்.



