
கோலாலம்பூர், மார்ச் 24 – 2 மில்லியன் ரிங்கிட் பெறுமதியான ஏழு நகைகளை கொள்ளையடித்த சந்தேகநபரின் நண்பரும் கடத்தல்காரராக செயற்பட்டவருமான நபர் இன்று சரணடைவார்.
அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் விசாரணைக்கு உதவுவதற்காக சரணடைவார் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேய்ன் ஒமார் கான் தெரிவித்தார்.
கோத்தா டமன்சாராவில் பேரங்காடியில் உள்ள ஒரு நகைக்கடையிலிருந்து 2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 7 நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னதாக 32 வயது ஆடவன் ஒருவனை கைது செய்த போலீசார் விசாரணைக்காக ஒரு வாரம் தடுத்து வைத்துள்ளனர்.
உலு சிலாங்கூர் புக்கிட் புருந்தோங்கில் (Bukit Beruntung) இரவு மணி 10.15அளவில் அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதோடு கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் மீண்டும் பறிமுதல் செய்யப்பட்டதாக உசேய்ன் தெரிவித்தார்.