Latestமலேசியா

கோத்தா பாருவில் ஆயுதங்கள் வைத்திருந்த ஆடவன் கைது; கைத்துப்பாக்கி & 36 தோட்டாக்கள் பறிமுதல்

கோத்தா பாரு,செப்டம்பர் 9 – கடந்த சனிக்கிழமை, கோத்தா பாரு ஜாலான் கம்போங் சிரேயிலுள்ள (Jalan Kampung Sireh) வீடொன்றில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், போலீசார் 50 வயதுடைய ஆடவரை கைது செய்து, அவரிடமிருந்த கைத்துப்பாக்கி மற்றும் 36 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபருக்கு முன்னதாக மூன்று குற்றப் பதிவுகள் மற்றும் ஒன்பது போதைப்பொருள் தொடர்பான பதிவுகள் இருந்தன என்று கிளந்தான் காவல் துறைத் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மமட் (Datuk Mohd Yusoff Mamat) கூறினார்.

மேலும் சந்தேக நபரின் சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் இருப்பதும் போலீசாரால் உறுதி செய்யப்பட்டது.

துப்பாக்கிச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்ட இக்குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ஆறு பிரம்படிகளும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆயுதத்தை வைத்திருந்ததற்காகவும் ஆபத்தான போதைப்பொருள் உட்கொண்டதற்காகவும் மேல் குறிப்பிட்ட தண்டனை வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர் செப்டம்பர் 7 முதல் நான்கு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாகவும் காவல் துறைத் தலைவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!