கோப்பேங் , நவ 12 – கோப்பேங்கிலிருந்து தாப்பாவுக்கு செல்லும் பிளஸ் நெடுஞ்சாலையின் 313 .6 ஆவது கிலோமீட்டரில் டேங்கர் லோரி ஒன்று சாலையின் நடுவே கவிழ்ந்ததைத் தொடர்ந்து ஆறு கிலோமீட்டருக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இன்று காலை மணி 9.05க்கு ஏற்பட்ட அந்த சம்பவத்தினால் நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிச் செல்லும் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் x தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து கோப்பேங் டோல் சாவடியின் முச்சந்தியிலிருந்து வெளியேறும் கூட்டரசு சாலையின் மாற்று வழியை பயன்படுத்தும்படி சாலையை பயன்படுத்தும் அனைவருக்கும் ஆலோசனை கூறப்பட்டது.
இன்று மதியம் மணி 12.31 நிலவரப்படி, அங்குள்ள அனைத்துப் பாதைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் மாற்று பாதை திறக்கப்பட்டதால் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து மெதுவாகவே இருந்தது. தெற்கை நோக்கிச் செல்லும் பாதையில் 6 கிலோமீட்டர் தூரத்திற்கும் வடக்கை நோக்கிச் செல்லும் பாதையில் 5 கிலோமீட்டர் தூரத்திற்கும் போக்குவரத்து நெரிச்சல் இருந்தது.