
கோம்பாக், ஆகஸ்ட்-3,
சிலாங்கூர், பிரிமா ஸ்ரீ கோம்பாக்கில் உள்ள ஒரு நகைக்கடையிலிருந்து தங்க காப்பைத் திருடிச் சென்ற ஆடவன் தேடப்படுகிறான்.
வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் அச்சம்பவம் நிகழ்ந்ததாக கோம்பாக் போலீஸ் கூறியது.
கடைக்குள் நுழைந்தவன், மனைவிக்கு தங்க நகையைப் பரிசளிக்க விரும்புவதாகக் கூறியுள்ளான்.
அவன் தேர்ந்தெடுத்த தங்கப் காப்பை காட்டி விட்டு, புகார்தாரரான பெண் calculator எடுக்கச் சென்ற போது, சந்தேக நபர் நகையோடு தனது மோட்டார் சைக்கிளில் தப்பியோடினான்.
CCTV கேமராவில் உருவம் பதிவாயிருக்கும் நிலையில், அவனை அடையாளம் காண போலீஸ் தீவிரமாக இறங்கியுள்ளது.