
கோலாத் திரெங்கானு, ஜூலை 30- போலி vape திரவங்களை விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில், நேற்று KUALA TERENGGANU மற்றும் Kuala Nerusஸில் உள்ள நான்கு மின் சிகரெட் அல்லது vape வளாகங்களில் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்கக் குழுக்களின் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையில், மொத்தம் 21,094 ரிங்கிட் மதிப்புள்ள 1,405 unit refil அல்லது நிரப்பு திரவங்கள் வெற்றிகரமாக பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையில் கோலாத் திரெங்கானு மாநகர் மன்றம், KUALA TERENGGANU மற்றும் Kuala Nerus மாவட்ட சுகாதார அலுவலகங்கள் போன்ற பிற நிறுவனங்களும் ஈடுபட்டன.
vape தயாரிப்புக்கான பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரையின் உரிமையாளரின் புகாரைத் தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக திரெங்கானு உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்ச்சின் இயக்குனர் Mohd Mufsi Lat தெரிவித்தார்.
தவறாக வர்த்தக முத்திரையிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1,405 யூனிட் மின் சிகரெட் நிரப்பு திரவம் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சோதனையின்போது vape வளாகத்தின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் என நம்பப்படும் 40 வயதுடைய நான்கு ஆடவர்களும் விசாரணைக்கு உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.