
கோலாலம்பூர், பிப் 19 – தொழுநோயினால் இருவர் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் கோலாப்பிலாவிலுள்ள பூர்வகுடிகளின் இரண்டு கிராமங்கள்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
பெரிய அளவில் அந்த நோய் பரவவில்லை என்பதால் இதுகுறித்து கவலைப்பட வேண்டியதில்லையென பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சர் Dzulkefly Ahmad ஆலோசனை தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பில் நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவோம் என்பதோடு தொழுநோய் பரவலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
கலலைப்படும் அளவுக்கு தொழுநோய் பரவல் இல்லை. எதிர்காலத்தில் இந்நோய் பரவலை தவிர்க்க முடியும் .
இரண்டு கிராமங்களில் மிகவும் குறைவானவர்கள் மட்டுமே இந்நோய்க்கு உள்ளானதாக மாவட்ட சுகாதார அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் சுகாதார அமைச்சு பெரிய முழுவீச்சில் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் Dzulkefly தெரிவித்தார்.