கோலாலம்பூர், அக் 23 – தவணை பணத்தை செலுத்தத் தவறியதால் தனது கார் வாகனத்தில் இழுத்துச் செல்வதற்கு முன் அக்காரின் கண்ணாடியை பெண் ஒருவர் உடைத்து நொறுக்கும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலானது. அந்த காரின் உரிமையாளர் 8 மாதங்களான தவணை பணத்தை செலுத்தத் தவறியதால் அதனை இழுக்க வந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அது தொடர்பான காணொளியை ஆட்டோமோட்டிவ் ஷிட் போஸ்டிங்களில் பதிவேற்றம் செய்த தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளாத பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த காரை இழுக்க வந்தவர்கள் முன்னிலையிலேயே கற்கள் மற்றும் இரும்பை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட பெண்ணும் சில தனிப்பட்ட நபர்களும் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்குவதை அந்த காணொளியில் பார்க்க முடிந்தது. இதனிடையே அந்த வாகனம் இழுத்துச் செல்லப்படுவதற்கு முன் அதை சேதப்படுத்தும் சக்தி தன்னிடம் இருந்ததாக கார் உரிமையாளரான அந்த பெண் தெரிவித்திருக்கிறார்.