கோலாலம்பூர், ஜன 23 – கோலாலம்பூரில் பசார் பூரோங்கிற்கு (Pasar Borong) அருகே தாமான் பத்து வியூவில் ( Taman Batu View ) கோலாலம்பூர் மாநாகர் மன்ற அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் கிடங்காகவும் மற்றும் பொருட்கள் விற்பனை இடமாகவும் பயன்படுத்தப்பட்ட 12 குடியிருப்பு வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
நடமாடும் வர்ததகத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்களுடன் காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களும் அதிகாரிகளின் அனுமதியின்றி அந்த வீடுகளில் வைக்கப்பட்டிருந்தது.
கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்திற்கான திட்ட சட்டத்தின் 26 ஆவது விதியின் கீழ் அந்த வீடுகளை கையிருப்பு பொருட்களின் கிடங்காக மாற்றியது குற்றமாகும்.
அந்த வீடுகளில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் கிடங்கிற்கு கொண்டுச் செல்லப்பட்டது.
இத்தகைய சோதனை நடவடிக்கை அவ்வப்போது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என கோலாலம்பூர் மாநகர் மன்றம் அறிவித்ததுள்ளது.