Latestஉலகம்

UN-Habitat உலக அமைப்பின் தலைவராக பேராதரவோடு மலேசியா தேர்வு

நைரோபி, மே-31, 2025-2029 தவணைக்கான ஐநாவின் UN-Habitat அமைப்பின் தலைவராக மலேசியா தேர்வாகி வரலாறு படைத்துள்ளது.

கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்ற UN-Habitat பொதுப்பேரவையில் மலேசியா 193 நாடுகளின் ஏகமனதான ஆதரவோடு மலேசியா அப்பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

அம்மகிழ்ச்சி செய்தியை மலேசியப் பேராளர் குழுவுக்குத் தலைமையேற்றுள்ள வீடமைப்பு-ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

முதன் முறையாக கிடைத்துள்ள இந்தத் தலைவர் பொறுப்பு உலக அரங்கில் நாட்டுக்கே கிடைத்த கௌரவம் என்றார் அவர்.

நிலைத்தன்மை மிக்க நகரங்களின் மேம்பாட்டை ஊக்குவிக்கும் ஐநாவின் துணை அமைப்பே இந்த UN-Habitat ஆகும்.

இதன் தலைவர் பொறுப்பு வட்டாரங்களுக்கு இடையில் சுழல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

அவ்வகையில் லத்தின் அமெரிக்க வட்டாரத்தைப் பிரதிநிதித்து தற்போது மெக்சிகோ தலைவராக உள்ளது; அடுத்து ஆசிய பசிஃபிக் வட்டாரத்தைப் பிரதிநிதித்து மலேசியா தலைவராக செயல்படும்.

மலேசியா ஆகக் கடைசியாக 1996-ஆம் ஆண்டு உலக அமைப்பொன்றுக்குத் தலைமையேற்றிருந்தது.

அப்போது 51-ஆவது ஐநா பொதுப் பேரவையின் தலைவராக தான் ஸ்ரீ ரசாலி இஸ்மாயில் பதவி வகித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!