சிரம்பான், நவ 29 – கோலா பிலா , Ulu Bendul உல்லாசப் பகுதிக்கு சென்றவர்களுக்கு எலி சிறுநீரின் மூலம் Leptospirosis தொற்று பரவிய சந்தேகம் தொடர்பில் நெகிரி செம்பிலான மாநில சுகாதாரத்துறை எட்டு புகார்களை பெற்றுள்ளது. அந்த தொற்றுக்கு உள்ளானவர்கள் காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுக் போக்கு பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக நெகிரி செம்பிலான் சுகாதாரத்துறையின் இயக்குனர் டத்தோ டாக்டர் ஹர்லினா அப்துல் ரஷிட் (Harlina Abdul Rashid ) தெரிவித்தார்.
மூவர் Leptospirosis தொற்றுக்கு உள்ளாகியிருப்பது குறித்து இம்மாதம் 19 ஆம் தேதி Sendayan சுகாதார கிளினிக்கிலிந்து சிரம்பான் வட்டார சுகாதார அதிகாரி குறிப்பை பெற்றுள்ளார். சிரம்பானைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. அவர்கள் இம்மாதம் 10 ஆம் தேதி Ulu Bendul உல்லாச பொழுது போக்கு மையத்திற்கு சென்றுள்ள தகவல் கிடைத்திருப்பதாக இன்று வெளியிட்ட அறிக்கையில்
ஹர்லினா சுட்டிக்காட்டினார். மேலும் நவம்பர் 10ஆம்தேதி மற்றும் நவம்பர் 16 ஆம் தேதிக்கிடையே அந்த பொழுதுபோக்கு பகுதிக்கு பயணம் சென்ற வரலாற்றைக் கொண்ட மேலும் ஐவரும் leptospirosis தொற்றுக்கான அறிகுறியை கொண்டிருப்பதாக சிரம்பான் சுகாதாரத்துறை தகவலை பெற்றுள்ளது.