
கோலாலம்பூர், பிப் 21 – Mid Valley Megamall வர்த்தக மையத்திற்கு அருகேயுள்ள ஆற்றில் நேற்று காணப்பட்ட முதலையை பிடிப்பதற்கு வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காத் துறை (Perhilitan ) அமைத்த வலையை இழுக்க கோழி இறைச்சி தூண்டில் பயன்படுத்தப்படுகிறது.
அந்த முதலை இன்னும் தூண்டிலை எடுக்கவில்லை என்பதோடு கடைசியாக காணப்பட்டதிலிருந்து அது இன்னும் வெளிவரவில்லையென Perhilitan இயக்குனர்
இஷாக் முகமட் ( Ishak Muhammad ) தெரிவித்தார்.
நாங்கள் அதைப் பிடித்து வேறு இடத்திற்கு மாற்றலாம் என்ற நம்பிக்கையில் அந்தப் பகுதியைக் கண்காணிக்கும் முயற்சிகள் தொடர்வதாக அவர் கூறினார்.