Latestமலேசியா

சமயச் சடங்குகள் இல்லாத பட்சத்தில் முஸ்லீம் அல்லாதோரின் கொண்டாட்டங்களில் முஸ்லீம்கள் பங்கேற்கலாம்; MKI தகவல்

கோலாலம்பூர், மே-16 – சமயச் சடங்குகள் இல்லாத பட்சத்தில், பிற மதங்களைச் சார்ந்தவர்களின் கொண்டாட்டங்களில் முஸ்லீம்கள் பங்கேற்பது, இஸ்லாமியச் சட்டப்படி ‘harus’ அல்லது அனுமதிக்கப்படுகிறது.

திறந்த இல்ல உபசரிப்புகள், இரவு உணவு விருந்து போன்றவை அதிலடங்கும்.

MKI எனப்படும் மலேசிய இஸ்லாமிய விவகாரங்களுக்கான தேசிய மன்றத்தின் முசாகாரா குழுவின் தலைவர் டத்தோ Dr நூ காடோட் (Nooh Gadot) அவ்வாறுக் கூறினார்.

எனினும் ஹலால் உணவுகள் பரிமாறப்படுவதோடு, இஸ்லாத்தால் தடைச் செய்யப்பட்ட எந்தவொரு கேளிக்கையோ நடவடிக்கையோ கூடாது என்றார் அவர்.

ஆனால், முஸ்லீம்கள் பிற மதங்களைச் சேர்ந்த சடங்குகளில் கலந்துகொள்வது ‘ஹராம்’ அல்லது தடைச் செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

இது, வழிபாட்டு இடங்கள் மட்டுமின்றி, மற்ற இடங்களுக்கும் பொருந்தும்.

மற்ற சமயத்தாரை மதிக்கும் செயலானது அவர்களை ஆதரிப்பதாக அர்த்தமாகாது.

ஆனால், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மற்ற சமயத்தாரின் சடங்குகளில் பங்கேற்பது, இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு எதிரானதாகும்.

‘ஈமான்’ மீது இது பாதிப்பை ஏற்படுத்தும்.

தவிர, தவறான எண்ணங்களை உருவாக்கி, இஸ்லாமிய அடையாளத்தை மங்கச் செய்து இளைஞர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என நூ காடோட் எச்சரித்தார்.

2005-ஆம் ஆண்டு மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான JAKIM வெளியிட்ட சுற்றறிக்கை மற்றும் பல மாநிலங்களின் ஃபத்வாக்களை அவர் மேற்கோளாகக் காட்டினார்.

“பண்பாட்டு” பெயரில் கூட இந்த சடங்குகளில் கலந்து கொள்ளக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.

மதம் மற்றும் கலாச்சாரம் இடையே வரம்புகளை தெளிவுபடுத்த அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!