
சுபாங் ஜெயா, நவம்பர் 5 – சன்வே பிரமிட் வணிக பேரங்காடி வாகனம் நிறுத்துமிடத்திலிருந்த பெரிய மாலை பாம்பால் பரபரப்பு நிலவியது.
கடந்த நவம்பர் 2ஆம் திகதி, அமைதியாக ஒரு வாகனம் நிறுத்துமிடத்தில் தனது இடத்தைப் பிடித்துக் கொண்டு அது படுத்திருந்த காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது.
தற்போதைய வெப்பமான சுற்றுச்சூழலால், அந்த பாம்பு எதாவது ஒரு வாகனத்தில் பதுங்கியிருந்து அங்கு வந்திருக்கலாம் எனச் சமூக வலைத்தளவாசிகள் தங்களின் ஆருடங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இன்னும் சிலர், வாகனம் நிறுத்துவதற்கு இடம்பிடிப்பதற்காக மனிதன் பாம்பாக மாறி அங்கு இருப்பதாகவும் நகைச்சுவையாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
எனினும், எவ்வாறு அந்தப் பாம்பு அங்கு வந்திருக்கும் என்று தெரியவிட்டாலும், பாம்பைப் பிடிக்கப் பணியிலிருந்த பாதுகாப்பு காவலர்கள் துடைப்பம் மற்றும் சாக்குப் பையைக் கொண்டு முயலும் காணொளிகளும் தற்போது வெளிவந்துள்ளது.