
கிள்ளான்,நவம்பர்- 3,
குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இயங்கிவரும் சன்ஷைன் கிட்ஸ் (Sunshine Kids) கல்விக் குழுமம் தனது 8ஆவது கிளையை போத்தானிக் கிள்ளான் பகுதியில் திறந்துள்ளது.
நிறுவனர் டாக்டர் R.V.Shyamprasad Ravikumar தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், மற்றும் நெகிரி செம்பிலான் முன்னாள் துணை சபாநாயகர் டத்தோ ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பெற்றோர்களுக்கும், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், மகிழ்ச்சியுடன் பங்கேற்ற மாணவர்களுக்கும் Shyamprasad தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்கும் ஒளிக்கதிராக திகழும் Sunshine கல்விக் குழுமம் அடுத்தடுத்து பல புதிய கிளைகளை திறந்து வருகிறது.
Française துறையில் இந்தியராக வெற்றி பீடு நடை போட்டு வரும் Shyamprasad பள்ளிக்கு முந்தைய கல்வியை அனைத்து குழந்தைகளுக்கும் கொண்டு சேர்ப்பதே தனது முக்கிய இலட்சியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக கல்வித்துறையில் தொழில் தொடங்க விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் ,தம்மை சந்தித்தால் புதிய Française கிளையை தொடங்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
Sunshine கல்வி குழுமத்தின் இணை தோற்றுநரும் ,அவருடைய துணைவியாருமான பரமேஸ்வரி மனோகரன் வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும், Sunshine Kids தனது ‘Open Day’ நிகழ்வை வரும் நவம்பர் 8ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.



