
சபரிமலை, நவம்பர்-21,
சபரிமலை மண்டல யாத்திரை காலத்தில் அதிகமான பக்தர்கள் கூடுவதால் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்த, திருவாங்கூர் தேவஸ்தான வாரியம் புதிய உத்தரவை வழங்கியுள்ளது.
குறிப்பாக தினசரி நேரில் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கையை 20,000-திலிருந்து 5,000-மாகக் குறைக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இணையம் வாயிலாக முன்பதிவு செய்து 70,000 பேரும் நேரில் முன்பதிவு செய்து 20,000 பேம் என ஒரு நாளைக்கு 90,000 பேர் மட்டுமே சபரிமலையில் அனுமதிக்கப்படுவார்கள் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், நேரில் முன்பதிவு செய்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் முன்னதாக வெறும் 48 மணி நேரங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.
கட்டுக்கடங்காத கூட்டத்தால் மூச்சுத் திணறி ஒரு மாது உயிரிழந்தார்.
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாரும் திணறினர்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் கேரள உயர் நீதிமன்றம் தலையிட்டுள்ளது.
அது பிறப்பித்த கடும் கட்டுப்பாடுகளின் பலனாக தற்போது சபரிமலையில் கூட்டம் குறைந்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
“பக்தர்களை சோதனை செய்து முன்னே அனுப்புவது மட்டுமே சரியான கூட்ட மேலாண்மை ஆகி விடாது ” என்றும் நீதிபதி கண்டித்தனர்.
இப்போது நேரடி முன்பதிவு 5,000 பேராக வரையறுக்கப்பட்டுள்ளதால், தினசரி 75,000 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.
இது பாதுகாப்பையும் ஒழுங்கையும் உறுதிச் செய்வதாக அதிகாரிகள் கூறினர்.



