
கோலாலம்பூர், நவ 8 – சபாவின் கூடாட்டிலிருந்து (Kudat) 1,313 கிலோமீட்டர் வட கிழக்கே ( Yinxing) சூறாவளி கண்டறியப்பட்டது குறித்து மலேசிய வானிலை ஆய்வு மையமான (மெட்மலேசியா) ஆலோசனையை வெளியிட்டது. பிலிப்பைன்ஸின் Laoag நகரிலிருந்து வடமேற்கே 118 கிமீ தொலைவில் சூறாவளி நிலைகொண்டுள்ளதாக மெட்மலேசியா நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இன்று காலை 8 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட வானிலை ஆய்வில் சூறாவளி மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், அதிகபட்ச வேகம் மணிக்கு 139 கிமீ வேகத்தில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்சீனக் கடல் பகுதியில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்பட்டது.