கோத்தா கினாபாலு, ஜனவரி-3 – சபா, கோத்தா கினாபாலு, கம்போங் லிக்காசில் நண்டு வேட்டையின் போது மின்சாரம் பாய்ந்து ஆடவர் உயிரிழந்தார்.
நேற்றிரவு 10 மணி வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தகவல் கிடைத்து சம்பவம் இடம் விரைந்த தீயணைப்பு – மீட்புத் துறை, 43 வயது அவ்வாடவர் பேச்சு மூச்சின்றி கிடப்பதை கண்டது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதும், அவரை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தி முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.
எனினும் அவர் உயிரிழந்து விட்டதை மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.
இதையடுத்து சடலம் மேல்நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.