
கோலாலம்பூர், டிசம்பர் 27-அரசாங்கம், சமூக ஊடகங்களுக்கு புதிய sandbox ஒழுங்குமுறை சோதனைத் திட்டத்தை வரும் ஜனவரி 1 முதல் அறிமுகப்படுத்துகிறது.
தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் அதனைத் தெரிவித்தார்.
sandbox என்பது, புதியக் கொள்கைகள் அல்லது தொழில்நுட்பங்கள், நாடு முழுவதும் அமுல்படுத்துவதற்கு முன், கட்டுப்படுத்தப்பட்டச் சூழலில் அவற்றை பரிசோதிப்பதாகும்.
அதன் போது, குழந்தைகள் உள்ளிட்ட பயனர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்காக, ஃபேஸ்புக் போன்ற தளங்களுடன் இணைந்து வயது சரிபார்ப்பு முறைகள் சோதிக்கப்படும்.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு குறைவானவர்களுக்கு சமூக ஊடகம் தடைச் செய்யப்பட்ட நிலையில், மலேசியா அதுபோல ஒரேடியாகத் தடை விதிக்காமல், தளங்களின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை சோதித்து பார்க்கிறது.
சில மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த sandbox சோதனைக் காலத்தில், பல்வேறு முறைகள் பரிசோதிக்கப்பட்டு, பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு உறுதிச் செய்யப்படும்.
வெற்றிகரமாக செயல்பட்டால், முழுமையான சட்ட அமுலாக்கம் பின்னர் நடைமுறைக்கு வரும் என்றார் அவர்.



