
கோலாலம்பூர், மார்ச் 21 – மற்றவர்களின் சொத்துக்களில் சட்டவிரோதமாக வழிபாட்டுத் தலங்கள் அமைப்பது குறித்து கேள்வி எழுப்பிய பின்னர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் கொலை மிரட்டல் வந்துள்ளதாக சமய போதகரான பிரடவுஸ் வோங் ( Firadaus Wong) கூறியுள்ளார்.
இதனிடையே தனக்கு எதிராக மிரட்டல் விடுத்த மோகன் ராஜ் தங்கராஜு (Mohan Raj Thangaraju) என்ற நபருக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு போலீசில் புகார் செய்துள்ளார் பிரடவுஸ் .
ஊடகங்கள் மற்றும் பிற ஆய்வுகள் தெரிவித்த தகவல்படி சட்டவிரோத கோயில்களைக் கட்டுவது தொடர்பில் உள்ள சட்ட பிரச்னையை தாம் விவாதித்தாகவும் ஆனால் சில தரப்பினர் உண்மைகளைப் புரிந்து கொள்ளவில்லை, உணர்ச்சிவசப்பட்டனர்.
இதனால் தாம் கொலை மிரட்டலுக்கு உள்ளானதாக இன்று பிரடவுஸ் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
எனினும் தனக்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு அஞ்சவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.