ஜோர்ஜ் டவுன், டிச 13 – பினாங்கில் சமையல் அறையிலும் உணவுகள் கையிருப்பு இடத்திலும் கரப்பான் பூச்சிகள் மற்றும் எலி எச்சங்கள் காணப்பட்டதை தொர்ந்து மூன்று வியாபார இடங்களை மூடும்படி உத்தரவிடப்பட்டது. பினாங்கு தீமோர் லாவுட் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைக்கு பின் 14 நாட்களுக்கு அந்த கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டதாக பினாங்கு மாநகர் மன்றம் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தது. இந்த சோதனையின்போது எண்ணெய் பொறி கருவி சேதமடைந்து, சரியாக செயல்படாமல் இருந்ததோடு , வாடிக்கையாளர்களை தங்கள் கடையில் புகைபிடிப்பதற்கு அனுமதித்ததும் தெரியவந்தது.
மேலும் உரிமம் இல்லாமல் விளம்பரங்களை வைத்திருந்தது, ஊழியர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தாதது , அசுத்தமான உணவைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்காதது, உணவை பொட்டலமிடுவதற்கு தூய்மையற்ற மற்றும் அச்சிடப்பட்ட காகிதங்களை பயன்படுத்தியது போன்ற குற்றங்கள் தொடர்பாக 13 Compaun களும் வழங்கப்பட்டன.