
கோலாலம்பூர், நவ 8 – செவ்வாய்க்கிழமை தொடங்கி இரண்டு நாட்கள் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் ஏற்பாட்டில் சாலை போக்குவரத்து குற்றங்களுக்கான சம்மன்களை பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட 50 விழுக்காடு கழிவைத் தொடர்ந்து 1.87 மில்லியன் ரிங்கிட் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த காலக்கட்டத்தில் 18 லட்சத்து 78,620 ரிங்கிட் சம்பந்தப்பட்ட 17,002 சம்மன்களுக்கு தீர்வு காணப்பட்டதாக புக்கிட் அமான் விசாரணை மற்றும் போக்குவரத்து அமலலாக்கத்துறையின் இயக்குனர் Datuk Seri Mohd Yusri Hassan Basri தெரிவித்தார்
ரொக்கத் தொகையாக 270,850 ரிங்கிட்டும் , மின்னியல் கட்டண முறை மூலம் 882,340 ரிங்கிட்டும் 50 விழுக்காடு கூப்பன் கட்டண கழிவு மூலம் 725,430 ரிங்கிட்டும் வசூலிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
முதல் நாளான செவ்வாய்க்கிழமை 7,677 சம்மன்களுக்கன 841,390 ரிங்கிட் வசூலிக்கப்பட்டது. இரண்டாவது நாளான புதன்கிழமை 9,325 சம்மன்களுக்கான 1.037 மில்லியன் ரிங்கிட் வசூலிக்கப்பட்டதாக முகமட் யுஸ்ரி கூறினார். சம்மன் தொகையை செலுத்துவதற்காக ஜாலான் Tun H.S Lee , கோலாலம்பூர் குற்றவியல் விசாரணை மற்றும் போக்குவரத்து அமலாக்கத் துறையில் சிறப்பாக திறக்கப்பட்ட முகப்பிடங்களுக்கு கடந்த இரண்டு நாட்களில் பொதுமக்களில் சுமார் 3,100 பேர் வந்ததாக அவர் தெரிவித்தார்.