
கோலாலம்பூர்,மார்ச்-6 – ஏரா வானொலியின் சர்ச்சைக்குரிய வீடியோ தொடர்பில் இஸ்லாமிய சமய சொற்பொழிவாளர் சா’ம்ரி வினோத், மீண்டும்இந்துக்களை சீண்டியுள்ளார்.
அதுவும் தைப்பூச காவடியாட்டத்தை மிகவும் கொச்சப்படுத்தி அவர் பேசியுள்ளது எல்லைமீறிய செயலென, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் சாடினார்.
‘வேல் வேல்’ என இந்துக்கள் ஆடுவதுபேயாட்டம் என்றும், மதுபோதையில் ஆடும் ஆட்டமென்றும் சா’ம்ரி வருணித்திருப்பது,
ஏற்கனவே காயப்பட்டுள்ள இந்துக்களை மேலும் வெறுப்படையச் செய்யும் செயலாகும்.
எனவே,தக்கப் பாடம் கற்பிக்கும் வகையில் அவரின் facebook கணக்கை உடனடியாக முடக்குமாறு, மலேசியத் தொடர்பு-பல்லூடக ஆணையம் MCMC-யை ராயர் வலியுறுத்தினார்.
மதங்களுக்கு இடையில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்து, தேசிய நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில்அவரின் தொடர் நடவடிக்கையில் இருக்கின்றன.
நிலைமை கைமீறிப் போகும் முன் சா’ம்ரிவினோத் மீது அதிகாரத் தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசநிந்தனைச் சட்டம், குற்றவியல் சட்டம், தொடர்பு-பல்லூடகச் சட்டம் ஆகியவற்றின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவுச் செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென,ராயர் கேட்டுக் கொண்டார்.
மக்களவையில் இன்று நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் ராயருடன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் V.கணபதிராவ், செனட்டர் Dr.ஆர் லிங்கேஷ்வரன் இருவரும்கலந்துகொண்டனர்.
சாம்’ரி விஷயத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது; எந்த சமரசமும் இல்லாமல்அவரை நீதிமன்றத்தில் குற்றம் சாட்ட வேண்டும்.
இல்லையென்றால் இது போன்ற இன மத அவமதிப்புகளுக்குஒரு முடிவிருக்காது என, கணபதிராவ் சொன்னார்.