Latestமலேசியா

சாலை சமிக்ஞை விளக்கை கார் மோதிய காணொளி வைரல் – போலீஸ் விசாரணை

சாலையின் சிவப்பு சமிக்ஞை விளக்கின்போது
அதனை மோதிய வாகனம் குறித்த காணொளி வைரலானதைத் தொடர்ந்து அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் அடையாளம் கண்டதோடு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதிகாலை மணி 12.30 அளவில் சிரம்பான், Jalan Haruan 2, NSK சாலை முச்சந்தியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமட் ஹட்டா சே டின் ( Mohamad Hatta Che Din ) தெரிவித்தார்.

அச்சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளிளை தங்களது தரப்பு அறிந்துள்ளதோடு , இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதோடு உண்மை நிலையையும் தெரிந்துவிட்டதால் சம்பந்தட்டவருக்கு எதிரக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

போலீஸ் படையிலுள்ள ஒவ்வொரு அதிகாரி மற்றும் உறுப்பினர் சாலை விதியை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்திய
முகமட் ஹட்டா, அவசர பணியின்போது மட்டுமே அவர்களுக்கு விதிவிலக்கு இருப்பதோடு அதுவும் பாதுகாப்பு மற்றும் நடவடிக்கையை சுமுகப்படுத்தும் வேளையில் மட்டுமே இதற்கு அனுமதி இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

சம்பந்தப்பட்ட நபர் விதிமுறையை மீறியிருப்பது விசாரணையில் தெரியவந்தால் சட்டத்திற்கு ஏற்ப அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே இந்த விவகாரம் தொடர்பில் ஆருடங்கள் அல்லது உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதை தவிர்க்கும்படி முகமட் ஹட்டா பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!