சிங்கப்பூர், செப்டம்பர்-27 – சிங்கப்பூரின் கிழக்கு-மேற்கு இரயில் சேவையில் ஏற்பட்ட தடங்கல் வாரக் கடைசி வரை நீடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
சீரான போக்குவரத்து முறைக்குப் பெயர் பெற்ற அந்நாட்டில், திட்டமிடப்படாத மிக நீண்ட இரயில் சேவைத் தடங்கலாக இது விளங்குகிறது.
செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கிய அப்பிரச்னை 4 நிலையங்களை உட்படுத்தியுள்ளது.
12 வயது மாணவர்களுக்கான அரசாங்கப் பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ள நேரத்தில் ரயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
அதற்காக இரயில் பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் Chee Hong Tat, இது ஒரு சவாலான பணி என்பதை ஒப்புக் கொண்டார்.
பழுதடைந்த தண்டவாளத்தைப் பழுதுப்பார்க்கும் பணியில் பொறியியலாளர்களும் தொழில்நுட்பப் பயணியாளர்களும் 40 மணி நேரங்களாக ஈடுபட்டுள்ளனர்.
செப்டம்பர் 30-குள் சேவையை முழுமையாக வழக்கத்திற்கு கொண்டு வர இரயில் சேவை நிறுவனமான SMRT உறுதியளித்துள்ளது.
சிங்கப்பூரின் 60 லட்சம் மக்களில் பெரும்பாலோருக்கு வேலைக்குச் செல்வதற்கும் பள்ளி செல்வதற்கும் விரைவான மற்றும் மலிவான போக்குவரத்து முறையாக உள்ளூர் இரயில் சேவை விளங்குகிறது.