Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்

சிங்கப்பூர் விமானத்தில் இரகளை; இறக்கி விடப்பட்ட 2 பயணி; சுமார் 2 மணி நேரம் விமானம் தாமதம்

சிங்கப்பூர், பிப்ரவரி-8 – பிப்ரவரி 6-ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து சீனாவின் ஷங்ஹாய் புறப்படவிருந்த விமானத்தில், பயணி ஒருவர் இரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விமானம் ஓடுபாதையில் போய்க் கொண்டிருந்த நேரத்தில், கழிவறைக்குச் செல்ல வேண்டுமென அம்மாது, பணியாளர்களிடம் கத்திக் கூச்சலிட்டார்.

விமானப் பணிப் பெண்ணின் கைகளைத் தட்டி விட்டு கழிவறைக்குச் சென்றவர், அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் கழிவறை கதவை உள்ளிருந்து எட்டி உதைத்தார்.

விமானம் அதிகாலை 1.15 மணிக்குப் புறப்பட்டிருக்க வேண்டும்; ஆனால் 1.40 ஆகியும் அவர் கழிவறையிலிருந்து வெளியே வரவில்லை.

பின்னர் ஒரு வழியாக வெளியே வந்தவர், இருக்கையில் அமரும் முன்பாக மற்ற பயணிளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

விமானப் பணியாளர்களைத் தகாத வார்த்தைகளால் அவர். திட்டவும் செய்தார்.

இது மற்ற பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

முதலில் பொறுமைக் காத்த விமானப் பணியாளர்கள், பிறகு விமானத்தை மீண்டும் விமான நிலையத்திற்கே திருப்பி விட்டனர்.

மற்ற பயணிகளின் பாதுகாப்புக் கருதி, அப்பெண் பயணியும் அவருடன் இருந்தவரும் உடனடியாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதனால் விமானப் பயணம் ஒன்றரை மணிநேரங்களுக்கும் மேலாகத் தாமதமடைந்தது.

நடந்த சம்பவத்துக்கு SIA விமான நிறுவனம் பயணிகளிடம் வருத்தம் தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட மாது மாண்டரின் மொழியில் கத்திக் கூச்சலிடுவதும், அவரை சமாதானப்படுத்த பணியாளர்கள் முயலுவதும் முன்னதாக வைரலான வீடியோவில் தெரிந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!