
சிங்கப்பூர், மார்ச்-8 – சிங்கப்பூரில் கிழக்கு மேற்கு MRT இரயில் பயணத்தின் போது ஒரு பெண்ணிடமிடிருந்த power bank தீப்பற்றியதில், அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
Raffles Place MRT நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை அச்சம்பவம் நிகழ்ந்தது.
உடனடியாக, அவசரத் தகவல் தொடர்பு பொத்தான் அழுத்தப்பட்டு, தீயணைப்புக் கருவியைக் கொண்டு இரயில் ஊழியர்கள் தீயை அணைத்தனர்.
இரயில் கதவு திறக்கப்பட்டதும் அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்; எவருக்கும் காயமேற்றப்படவில்லை என, SMRT நிறுவனம் கூறியது.
Chen என மட்டுமே தன்னை அடையாளம் கூறிக் கொண்ட பாதிக்கப்பட்ட பெண், தான் சந்தித்த அந்த பரபரப்பான நிமிடங்கள் குறித்து சீன சமூக ஊடகத் தளமான Xiaohongshu-வில் படங்களோடு பதிவிட்டுள்ளார்.
அதில் அவரின் கை, தீ பட்டு கருத்துப் போயிருப்பது தெரிகிறது.
எனினும் சம்பவத்தின் போது power bank பயன்பாட்டில் இல்லை; அதனுடன், கைப்பேசி, கேபள் வயர் ஆகியவை தனது கைப்பையினுள் இருந்ததாக அவர் சொன்னார்.
இந்நிலையில் பரிசோதனையில், power bank தான் தீ ஏற்பட்டதற்குக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.