
சிபு, சரவாக், ஆகஸ்ட் 5 – நேற்று, சரவாக் சிபு ஜாலான் பெடாடாவில், காணாமல் போன சிறுவன் ஒருவன், கழிவு நீர் குழியில் பிணமாக மீட்கப்பட்டுள்ளான்.
முன்னதாக, இறந்த அந்தச் சிறுவனின் தந்தை தனது மகன் காணவில்லை என்றும், சாக்கடைக் குழியில் விழுந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக புகார் அளித்துள்ளார்.
அவசர அழைப்பைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிபு சென்ட்ரல் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) பணியாளர்கள் மற்றும் சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் (JBPM) தேடுதலுக்குப் பின்னர் கழிவு நீர் குழியில் சிறுவனைக் கண்டுபிடித்துள்ளனர்.
சிறுவன் இறந்து விட்டதை, மலேசிய சுகாதார அமைச்சின் (KKM) மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்திய நிலையில் அவனது உடல் மேல் நடவடிக்கைகளுக்காக
காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.