
சியோல், மார்ச் 25 -சியோலில் திடீரென தோண்டப்பட்ட பெரிய குழியில் விழுந்த மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் கொல்லப்பட்டதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. அவரது மோட்டார் சைக்கிள் அந்த குழியில் விழுந்ததை காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் தென் கொரிய தலைநகரின் தென்கிழக்கில் உள்ள ஒரு சந்திப்பில் இந்த இருந்த பெரிய குழியில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. ஒரு பரபரப்பான தெருவின் நடுவில் திடீரென குழி இருப்பதை உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஏ.எப் பியுடன் பகிர்ந்துகொண்ட டாஷ்கேம் காட்சியில் காணமுடிந்தது.
ஒரு கார் அதே வீதியிலிருந்து மயிரிழையில் தப்பி, துளைக்குள் சறுக்கி, எப்படியோ வெளியே குதித்து வெளியேறும் போது ஒரு மோட்டார் சைக்கிள் உடனடியாக அக்குழியில் விழுந்தது.
இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் பெரிய அளவில் தேடும் நடவடிக்கையை மேற்கொண்டனர். மீட்புப் பணியாளர்கள் மோப்ப நாயுடன் சேர்ந்து கைகளால் குழியைத் தோண்டி மோட்டார் சைக்கிள் ஓட்டியின் உடலை 17 மணி நேர தேடும் நடவடிக்கைக்குப் பின் மீட்டனர்.
காணாமல் போன முப்பது வயது மதிக்கத்தக்க நபர், புதைகுழியின் மையக் கோட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் மாரடைப்பில் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டார் என்று கேங்டாங் தீயணைப்பு நிலைய அதிகாரி கிம் சாங்-சியோப் செய்தியாளர்களிடம் கூறினார். அவர் சுமார் 90 சென்டிமீட்டர் அல்லது (மூன்று அடி) ஆழத்தில் புதையுண்டு காணப்பட்டார்.
தலைக்கவசம் மற்றும் மோட்டார் சைக்கிள் பூட்ஸ் அணிந்திருந்த நிலையில் அவரது உடல் கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சொற்ப காயத்திற்கு உள்ளானார். அந்த குழி சுமார் 20 மீட்டர் அகலமும் 20 மீட்டர் ஆழமும் கொண்டதாக இருந்தது என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்காக அருகிலுள்ள ஒரு சில பள்ளிகள் இன்று மூடப்பட்டன. குழிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டது.