
சிரம்பான், நவம்பர்-7 – மலேசியாவில் நடப்பட்ட ஆக பழைமையான இரப்பர் மரங்களில் ஒன்று, நூற்றாண்டை கடந்தும் சிரம்பான் மாநகரில் இன்னமும் கம்பீரமாகவும் செழிப்பாகவும் காட்சியளிக்கிறது.
Seremban Lake Garden-னில் 1877-ஆம் ஆண்டு நடப்பட்ட அந்த இரப்பர் மரம், நெகிரி செம்பிலானின் முக்கிய சுற்றுலா இடமாகவும் விளங்குகிறது.
4.5 மீட்டர் சுற்றளவும், 25 மீட்டர் உயரமும் கொண்ட அம்மரத்தின் இன்றைய மதிப்பு 750,000 ரிங்கிட் எனக் கூறப்படுகிறது.
அம்மரத்தின் விதை, மலாயா இரப்பர் தோட்டங்களின் முன்னோடியான Sir H.N. Ridley-யால் 1877-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டதாகும்.
நூற்றாண்டைக் கடந்தும் கம்பீரத் தோற்றமளிக்கும் அம்மரம், சிரம்பானின் பாரம்பரிய அம்சங்களில் ஒன்றாக விளங்குவதாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Nicole Tan Lee Koon பெருமிதம் தெரிவித்தார்.
வெளிமாநிலங்களைச் சேர்ந்தோரும் அந்த வரலாற்று மரத்தை நேரில் கண்டு வியக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.