
சிரம்பான், டிசம்பர் 26-சிரம்பான், லோரோங் ஜாவா தமிழ்ப் பள்ளியில் திறந்த வெளி மண்டப அடிக்கல் நாட்டு விழா விமரிசையாக நடைபெற்றது.
மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமார் ஜம்புநாதன் அதற்குத் தலைமைத் தாங்கினார்.
நெகிரி செம்பிலானில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றாக இந்த லோரோங் ஜாவா தமிழ்ப் பள்ளி விளங்குகிறது.
700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு பயிலுகின்றனர்.
இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி சுமார் 700,000 ரிங்கிட் செலவில் இப்புதிய மண்டப கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளது.
மண்டபம் முடிந்தவுடன் பல்வேறு கல்வி மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த முடியும் என அருள் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இரண்டாவது கட்டமாக, இரண்டு மாடி சிற்றுண்டி சாலை கட்டுமானம், தேவையான அனுமதிகள் கிடைத்த பிறகு தொடங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
கட்டுமானம் தொடங்குவதற்கு பங்காற்றிய அனைவருக்கும் அவர் நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றனர்.



