சிரம்பான், செப்டம்பர் -9 – தவறுதலாக எண்ணெயை அழுத்தியதால், பதின்ம வயதுப் பையன் ஓட்டியக் கார் சிரம்பான் Terminal One பேருந்து முனையத்தின் முதல் மாடியிலிருந்து விழுந்து, அவன் தலையில் காயமடைந்தான்.
ஞாயிற்றுக்கிழமை காலை 11.45 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.
19 வயது அப்பையன் ஓட்டிய Honda City கார், Terminal One பேருந்து முனையத்தின் கார் நிறுத்துமிடத்திலிருந்து Seremban 2-வில் உள்ள வீட்டுக்குக் கிளம்ப எத்தணித்தது.
முதல் மாடிக்கு வந்த போது, அப்பையன் பிரேக்கிற்கு பதிலாகத் தவறுதலாக எண்ணெயை அழுத்தியதால், கார் கட்டுப்பாட்டை இழந்து இரும்பு வேலியை மோதி கீழ் தளத்தில் விழுந்தது.
அதில், கீழே ஆளில்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றும் சேதமடைந்தது.
காயமடைந்த பையன் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.
போலீஸ் அச்சம்பவத்தை விசாரித்து வருகிறது.