
சிரம்பான், அக்டோபர் 31 –
13 வயது மட்டுமே நிரம்பிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆடவன், இன்று சிரம்பான் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டான்.
கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி, லெங்கேங் அருகே உள்ள கம்போங் உலு பெரனாங் (Kampung Ulu Beranang, Lenggeng) பகுதியிலிருக்கும் கிடங்கு ஒன்றில் குற்றவாளி அக்குற்றத்தைப் புரிந்துள்ளான்.
குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்ட இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் நீதிமன்றம், குற்றச்சாட்டப்பட்டவனை ஜாமீனில் விடுதலை செய்ததுடன், இவ்வழக்கை வரும் நவம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
 
				 
					 
					


