
ஷா ஆலாம், டிசம்பர்-18 – சிலாங்கூர் மாநில பேரங்காடிகளில் செல்லப் பிராணிகளை கொண்டு வருவதற்கு விதிக்கப்பட்ட தடை இன்னும் நீக்கப்படவில்லை!
ஊராட்சி மற்றும் சுற்றுலா துறைகளுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் Ng Suee Lim அதனைத் தெரிவித்துள்ளார்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பேரங்காடி, அண்மையில் செல்லப் பிராணிகளுடன் வருகையாளர்களை உள்ளே அனுமதித்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், அவர் அவ்வாறு சொன்னார்.
செல்லப் பிராணிகளை பேரங்காடிகள் போன்ற இடங்களுக்குள் அனுமதிப்பது சில நாடுகளில் வழக்கமான ஒன்றாக இருக்கலாம்.
ஆனால், மலேசியாவின் பல இன, பல கலாச்சார சூழலை கருத்தில் கொண்டு, சமூக ஒற்றுமையை பாதுகாக்கும் வகையில் இத்தடை தொடரும் என்றார் அவர்.
எனினும், இது தொடர்பான வழிகாட்டுதல்கள் மறுஆய்வு செய்யப்படலாம் என்றும், ஆனால் எந்த மாற்றமும் கவனமாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.



