Latestமலேசியா

சிவப்பு எச்சரிக்னகை விளக்கை மீறியதற்காக இவ்வாண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம்வரை 95,000த்திற்கும் மேற்பட்ட சம்மன்கள் விநியோகம்

கோலாலம்பூர், டிச 17 – நாடு முழுவதிலும் சாலையில் சிவப்பு எச்சரிக்கை விளக்கை மீறியதற்காக இவ்வாண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம்வரை 95,000 த்திற்கும் மேற்பட்ட சம்மன்கள் விநியோகிக்கப்பட்டன.

அவற்றில் அதிக எண்ணிக்கையில் கார் ஓட்டுநர்கள் 44,889 சம்மன்கள் பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் 39,468 சம்மன்களையும் , லாரி ஓட்டுநர்கள் 3,937 சம்மன்களையும் மற்றும் பிற வாகன ஓட்டுநர்கள் 7,004 சம்மன்களையும் பெற்றதாக புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத்துறையின் இயக்குநர் யுஸ்ரி ஹசான் பஸ்ரி ( Yusri Hassan Basri ) தெரிவித்துள்ளார்.

சாலையில் சிவப்பு எச்சரிக்கை விளக்கை மீறுவது கடுமையான போக்குவரத்து மீறல் என்பதோடு இதனால் ஏற்படும் விபத்துக்கள் உயிரிழப்புகளுக்கு வித்திடும் என அவர் கூறினார்.

எனவே இந்த விதிமுறைகளை மீறுவோரிடம் நாங்கள் எந்தவொரு இணக்கப் போக்கையும் கொண்டிருக்கமாட்டேன் என்பதோடு அடையாளம் காணப்படும் இடங்களில் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

இதுதவிர பெரிய சாலை சந்திப்புகளில் ரகசிய கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படுவதோடு சாலை விதிகளை மீறுவோர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யுஸ்ரி எச்சரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!