Latestமலேசியா

சீனப் பிரஜையிடம் RM2.1 மில்லியன் கொள்ளை; மெக்கானிக் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், அக்டோபர்-4,

சீன நாட்டு பிரஜையிடம் RM2.1 மில்லியன் ரிங்கிட் கொள்ளையிட்டதாக, மெக்கானிக் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டார்.

எனினும், 42 வயது Ali Imran Alqudri Syed Zulkefeli அதனை மறுத்து விசாரணைக் கோரினார்.

31 வயது சீனப் பிரஜையிடமிருந்து, RM1.2 மில்லியன் மதிப்புள்ள ஆடம்பர கடிகாரம், 3 தங்கக் கட்டிகள், RM100,000 ரொக்கம் மற்றும் 5 கைப்பேசிகளை ஜூலை 21-ஆம் தேதி புக்கிட் டாமான்சாரா வில்லாவில் கொள்ளையடித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறையுடன் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

பிரதிவாதி கடப்பிதழை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, RM15,000 ரொக்கம் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்துடன் அவரை ஜாமீனில் விடுவித்தார்.

வழக்கு நவம்பர் 4-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!