Latestமலேசியா

சீனப் புத்தாண்டுக்கு உணவகங்களில் 15%-க்கு சேவைக் கட்டணம் உயர்வு

கோலாலம்பூர், ஜனவரி-21 – சீனப் புத்தாண்டை ஒட்டி சேவைக் கட்டணம் 15 விழுக்காட்டுக்கு உயரவிருப்பதை, மலேசியத் சிங்கப்பூர் காப்பிக் கடை உரிமையாளர்கள் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

சீனப்புத்தாண்டு முதலிரண்டு நாட்களிலும் வேலை செய்யும் பணியாளர்களுக்கு பெருநாள் ‘டிப்ஸ்’ தொகையாக அக்கூடுதல் கட்டணம் அமைவதாக அது கூறியது.

வழக்கமாக, உணவகங்கள் நடப்பிலுள்ள 10 விழுக்காட்டு சேவைக் கட்டணைத்தை நிலை நிறுத்தும் அல்லது பெருநாளின் முதலிரு நாட்களிலும் செயல்படாது என, அச்சங்கத்தின் தலைவர் Wong Teu Hoon தெரிவித்தார்.

சங்கத்தில் உறுப்பியம் பெற்றுள்ள உணவகங்களின் முடிவுகளில் நாங்கள் தலையிட முடியாது; அவர்கள் சரியென நினைக்கும் விகிதத்தில் சேவைக் கட்டணத்தை விதிக்கலாமென்றார் அவர்.

இந்த 15 விழுக்காட்டு சேவைக் கட்டண உயர்வு குறித்து உணவகங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டன; ஆக அவ்வுணவங்களுக்குச் செல்வதும் செல்லாததும் வாடிக்கையாளர்களின் உரிமையாகும் என Wong சொன்னார்.

சீனப் புத்தாண்டு அன்றும் அதன் மறுநாளும் சேவைக் கட்டணம் அதிகரிக்குமென அறிக்கை விட்ட ஓர் உணவகம், வலைத்தளங்களில் ‘வறுபடுவது’ குறித்து அவர் FMT-யிடம் கூறினார்.

அக்கூடுதல் கட்டணம், 6 விழுக்காடு விற்பனை மற்றும் சேவை வரியை உட்படுத்தவில்லை என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதனால் கொந்தளித்த வலைத்தளவாசிகள் இது அரசாங்கத்துக்குத் தெரியுமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சீனப்புத்தாண்டு வரும் ஜனவரி 29, 30-ஆம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!