
ஷாங்காய் – சீனாவில் ஹைடிலாவ் (Haidilao) பிரபல உணவகத்தின், ஷாங்காய் கிளையில் ஒருவர் hotpot எனும் கொதிபானையில் சிறுநீர் கழித்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, பொதுமக்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 24 அன்று நடந்த இச்சம்பவத்தில், 17 வயதான இரண்டு இளஞர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர்கள் போலீசாரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அச்சம்பவத்தைச் சரியாகக் கையாள தவறிவிட்டதாக ஒப்புக்கொண்ட அவ்வுணவகம், பிப்ரவரி 24 முதல் மார்ச் 8 வரை உணவு வாங்கிய 4,100க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு முழுமையான பணத்தை திருப்பித் தருவதோடு, கூடுதல் நஷ்டஈடு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
ஆனால் அந்த உணவகம் சம்பவத்திற்குப் பின்னர் தாமதமாக மன்னிப்பு கேட்டது என்று சமூக வலைதளவாசிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
2008-ஆம் ஆண்டு பால் பவுடர் நச்சு பாதிப்பு விவகாரம் நிகழ்ந்த பிறகு சீனா உணவு பாதுகாப்பு விதிமுறைகளைப் பலப்படுத்தியிருந்தாலும், உணவகங்களில் சுகாதார மீறல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாக பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.