பெய்ஜிங், செப்டம்பர் -27 – சீனாவில் தனது மேலாளருக்கு காலைப் பசியாறை வாங்கித் தர மறுத்ததால், பெண் ஊழியர் வேலையிலிருந்தே நீக்கப்பட்ட சம்பவம் பெரும் கண்டனத்தைப் பெற்றது.
கல்வி நிறுவனமொன்றில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த Lou எனும் அப்பெண்ணிடம், அவரின் மேலாளரான பெண்மணி தினமும் காலையில் ‘Americano’ பானத்தையும் முட்டையையும் வாங்கி வருமாறு பணித்துள்ளார்.
அதோடு தண்ணீர் பாட்டிலையும் எடுத்து வர வேண்டுமாம்.
இப்படியே போய் கொண்டிருந்ததால் உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்த Lou, ஒரு கட்டத்தில் அலுவலகப் பணியாளர்களுக்கான Whatsapp குழுவில் அதிருப்தியைக் கொட்டி விட்டார்.
இதனால் Whatsapp குழு நிர்வாகியால் கண்டிக்கப்பட்டவர், சில நாட்களிலேயே வேலையிலிருந்தும் நீக்கப்பட்டார்.
அதற்கும் இழப்பீடும் கிடையாது என தெரிவிக்கப்பட்டது
தனக்கு நேர்ந்த அநியாயத்தை சமூக ஊடகத்தில் Lou அம்பலப்படுத்த அச்சம்பவம் வைரலாகி கடும் விமர்சனங்களைப் பெற்றது.
இதையடுத்து, அதிகார துஷ்பிரயோக குற்றத்திக்காக அந்நிறுவனம் உடனடியாக Lou-வின் மேலாளரைப் பணி நீக்கம் செய்து, Lou-வை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொண்டுள்ளது.
எனினும் அந்த குறுகிய கால வேலை நீக்கத்திற்கு அவருக்கு இழப்பீடு வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.