Latestமலேசியா

சீனாவில் வரன் மோசடியில் சிக்கும் ஆண்கள்; ‘போலி’ திருமணத்தால் கொள்ளை இலாபம் பார்க்கும் பெண்கள்

பெய்ஜிங், நவம்பர்-29, தென்மேற்கு சீனாவில், திருமணம் செய்தே ஆக வேண்டுமென்ற இக்கட்டான நிலையிருக்கும் ஆண்களை, மணப்பெண் என்ற போர்வையில் பெண்களை நடிக்க வைத்து திருமண வரன் பார்க்கும் நிறுவனங்கள் ஏமாற்றி வந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

அடையாளம் காணப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் தற்போது போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

‘மணப்பெண்களாக’ நடித்த அப்பெண்களில் பலர், ஒரு சில மாதங்களிலேயே 186,000 ரிங்கிட் வரை சம்பாதித்திருக்கின்றனர்.

இந்த வரன் தேடித் தரும் நிறுவனப் பணியாளர்களில் பாதிப் பேரின் வேலையே, கிராமப் புறங்களைச் சேர்ந்த திருமணமாகாத ஆண்களைத் தேடிப் பிடிப்பது தான்;

எஞ்சியவர்கள், திருமணமாகாமலிருக்கும் பெண்களைத் தேடுகின்றனர்; அதுவும் விவாகரத்தான அல்லது கடன் பிரச்னையில் தத்தளிக்கும் பெண்களைத் தேடிக் கண்டுபிடித்து, ஆண்களை ஏமாற்றும் மோசடியில் பங்கேற்க சம்மதிக்கவும் வைத்து விடுகின்றனர்.

வரன் பேசி முடித்ததும், நேரில் சந்திக்க வைத்து, திருமணத்திற்கான ஒப்புதலையும் பெற்று விடுகின்றனர்.

மணப்பெண் கிடைத்ததற்கான கட்டணமாக லட்ச கணக்கில் பணத்தையும் ஆண்கள் கட்ட வேண்டியுள்ளது.

எனினும், கொஞ்ச நாட்களிலேயே ‘மணப்பெண்’ ஓடிப்போவது, திடீரென காணாமல் போவதும் அல்லது விவாகரத்துக்கு நிர்பந்திப்பது என பல ‘கூத்துகள்’ நடைபெறுகின்றன.

வரன் பார்த்து ஏமாந்த ஓர் ஆடவர், 71,000 ரிங்கிட் பணத்தை ‘மணப்பெண்’ வீட்டுக்கு பரிசாகத் தந்துள்ளார்.

ஆனால் அம்மாது ஏற்கனவே திருமணமாகி 5 பிள்ளைகளுக்குத் தாயானவர் என்பது 2 மாதங்களுக்குப் பிறகே அவருக்குத் தெரிய வந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!