பெய்ஜிங், ஜனவரி-23,
தென்மேற்கு சீனாவில் வளர்ப்புப் பூனையால் பெண்ணின் வேலையே பறிபோயிருக்கிறது.
25 வயது அப்பெண், வேலையிலிருந்து ராஜினாமா செய்யும் கடிதத்தை தயார் செய்து , மின்னஞ்சலில் வைத்திருந்தார்.
எனினும் அதனை முதலாளிக்கு அனுப்ப அவருக்கு மனம் வரவில்லை;
அதற்கு காரணம், வருமான இழப்பு ஏற்பட்டு விடுமென்பதே; அதோடு, வீட்டில் வளர்த்து வரும் 9 பூனைகளைப் பராமரிக்கவும் பணம் வேண்டும்.
எனவே, ராஜினாமா கடிதத்தை முதலாளிக்கு அனுப்பாமல், மின்னஞ்சலிலேயே அவர் வைத்துள்ளார்.
எனினும், அவரின் துரதிஷ்டம், வீட்டில் உள்ள ஒரு பூனை, மேசை மீதேறி மடிக்கணினியின் enter பொத்தானை தவறுதலாக அழுத்தி விட்டது.
ராஜினாமா கடிதமும் முதலாளியின் மின்னஞ்சலுக்கு போய் சேர்ந்து விட்டது.
பதறியடித்து முதலாளியைத் தொடர்புக் கொண்டு பூனையின் மீது அப்பெண் பழியைப் போட்டாலும், முதலாளி கேட்கவில்லை.
ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு அப்பெண்ணை வேலையிலிருந்து நிறுத்தி விட்டார்.
வேலை போனது கவலையென்றாலும், பூனை மீது அவருக்கு கோபம் வரவில்லை.
அந்த பூனையோடு சேர்த்து 9 பூனைகளுக்கும் தீனி போட வேண்டுமென்பதால், சீக்கிரமே புதிய வேலைத் தேட அப்பெண் உறுதி பூண்டுள்ளார்.