Latestமலேசியாவிளையாட்டு
சீ போட்டியில் மலேசிக் கபடி குழு தங்கம் வென்று சாதனை

பேங்கோக், டிசம்பர் 19-தாய்லாந்து சீ போட்டியில் மலேசிய ஆடவர் கபடி குழு முதல் தங்கப் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்துள்ளது.
இறுதியாட்டத்தில் தேசிய வீரர்கள் 28-16 என்ற புள்ளிக் கணக்கில் தாய்லாந்தை தோற்கடித்து, ராஜமங்களா தொழில்நுட்பப் பல்கலைக்கழக அரங்கையே அதிர வைத்தனர்.
முன்னதாக வெண்கலப் பதக்கங்களைக் குவித்த தேசிய கபடிக் குழுவுக்கு, தாய்லாந்தில் இது முதல் தங்கப் பதக்கமாகும்.
இவ்வேளையில் கபடியில் இரட்டை தங்கம் வெல்லும் வாய்ப்பை மலேசியா நூலிழையில் தவறவிட்டது.
பெண்களுக்கான இறுதியாட்டத்தில் தேசிய வீராங்கனைகள் 22-23 என இந்தோனேசியாவிடம் ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வி கண்டு தங்கப் பதக்கத்தை பறிகொடுத்தனர்.
இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இந்த கபடி போட்டி, முதன் முறையாக சீ போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.



