
சுங்கைபட்டானி ஜன 21- சுங்கைப் பட்டாணி பத்து டுவா ஸ்ரீ மாகா மாரியம்மன் ஆலயத்தின் பதிவை கெடா மாநில பதிவு இலாகா ரத்துச் செய்ததைத் தொடர்ந்து பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த தகவல் அறிந்ததும் இவ்வட்டாரத்தில் பிரபலமான ஆலயங்களில் ஒன்றாக திகழ்ந்த இந்த ஆலயத்தின் முன்னே பக்தர்கள் கூடினர்.
ஆலய நிர்வாகத்திற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி காரணம் கோரும் கடிதம் ஒன்றை கெடா மாநில பதிவு இலாக அனுப்பியிருந்தது. இந்த கடிதத்திற்கு இதுவரை ஆலய நிர்வாகம் பதில் அளிக்காமல் இருந்ததாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து அந்த ஆலயத்தின் பதிவை 31.12.2024 இல் முதல் ரத்துச் செய்வதாக கெடா மாநில சங்கப் பதிவு இலாகா கடிதம் வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் விரைவில் எம். நாகேந்திரன் தலைமையில் இடைக்கால நிர்வாகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதோடு விரைவில் கெடா மாநில பதிவு இலாகாவை சந்திக்கவிருப்பதாக அவர் தெரிவித்தார்.