Latestமலேசியா

சுங்கை டுவாவில் தனித்து வாழ்ந்த தாய் கொலை; இருவர் கைது

பட்டர் வெர்த் , பிப் 5 -Sungai Dua, Sungai Murniயில் உள்ள அடுக்கு மாடி வீட்டின் முதல் மாடியில் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் ஒரு பெண்ணின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைக்கு உதவுவதற்காக இரண்டு ஆடவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட அவ்விரண்டு நபர்களும் இன்று இரண்டு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் ( Azizee Ismail )தெரிவித்தார்.

தண்டனைச் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் அந்த பெண்ணின் கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால் கப்பளா பத்தாஸ் ( Kepala Batas)மருத்துவமனையிலிருந்து அவரது சவப் பரிசோதனை அறிக்கைக்காக போலீஸ் இன்னமும் காத்திருக்கிறது.

41 வயதுடைய அந்த பெண் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் வீட்டின் ஒரு அறையில் படுக்கையில் இறந்து கிடந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

தனிமையில் இருந்த அப்பெண்ணின் வீட்டின் கதவு திறந்திருந்தும், முள்வேலி பூட்டப்பட்டிருந்தும், எந்த பதிலும் அளிக்காததால், மதியம் 1.40 மணியளவில் அண்டை வீட்டுக்காரர் ஒருவர் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்ததாக தெரிகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!