Latestமலேசியா

சுங்கை பட்டாணியில் மீன்பிடி உபகரணங்கள் விற்கும் கடையில் கொள்ளை; 4 மணி நேரங்களில் சிக்கிய கும்பல்

சுங்கை பட்டாணி, நவம்பர்-11 – கெடா, சுங்கை பட்டாணியில் மீன்பிடி உபகரணங்களை விற்கும் கடையைக் கொள்ளையிட்ட நால்வர் கும்பல், நான்கே மணி நேரங்களில் போலீசிடம் சிக்கியது.

அச்சம்பவம் நேற்று காலை 10.30 மணியளவில் Jalan Lencongan Barat-டில் உள்ள கடையில் நிகழ்ந்தது.

கடையின் உரிமையாளரான 65 வயது முதியவரும், அவரின் 61 வயது மனைவியும் அப்போது தான் கடையைத் திறந்திருந்தனர்.

முதல் வாடிக்கையாளராக மீன்பிடி உபகரணங்கள் வாங்குவது போல் கடைக்குள் நுழைந்த ஆடவன், சற்று நேரத்தில் எதை வாங்குவது என்று வெளியில் காரில் காத்திருக்கும் அண்ணனிடம் கேட்டு வருவதாகக் கூறிச் சென்றான்.

10 நிமிடங்களில், பாராங் கத்தி ஏந்திய தனது நண்பனுடன் மீண்டும் கடைக்குள் நுழைந்தவன் அந்த வயதான தம்பதியை அமைதிக் காக்குமாறு மிரட்டினான்.

அந்த நேரத்தில் அக்கொள்ளையர்களின் மேலுமிரு சகாக்கள் பல்வேறு மீன்பிடி உபகரணங்களையும், கல்லாப்பெட்டியிலிருந்த 10,000 ரிங்கிட் ரொக்கத்தையும், ஒரு கைப்பேசியையும் அபகறித்துக் கொண்டனர்.

அவற்றின் மொத்த மதிப்பு 26,000 ரிங்கிட் என நம்பப்படுகிறது.

கொள்ளையிட்ட பொருட்களுடன் Perodua Bezza காரில் தப்பியோடியவர்கள், சுங்கை லாயார் பகுதியில் பிற்பகல் 2.30 மணிக்கெல்லாம் போலீசிடம் சிக்கினர்.

கொள்ளையிடப்பட்ட பொருட்களும் ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டதாக குவாலா மூடா போலீஸ் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!