Latestமலேசியா

சுங்கை பண்டானில் அம்மோனியா வாயு கண்டுபிடிப்பு; விசாரணை தொடரும் – ஜோகூர் சுற்றுச்சுழல் துறை

ஜோகூர், செப்டம்பர் 4 – ஜோகூர் சுற்றுச்சுழல் துறை, நேற்று மாலை 4 மணியளவில் சுங்கை பாண்டன், கம்போங் மெலாயூ பாண்டனில் (Sungai Pandan, Kampung Melayu Pandan), அமோனியா வாயு அதிக அளவில் காற்றில் கலந்திருப்பதைக் கண்டறிந்தது.

பொதுவாகவே கழிவுநீர், உரம் மற்றும் ஐஸ் தொழிற்சாலைகள் போன்ற தொழிற்சாலைகளிலே அமோனியா வாயு பயன்படுத்தப்படுகிறது.

ஆகையால், அந்த பகுதியைச் சுற்றி இயங்காத தொழிற்சாலைகளிலிருந்து லோரிகள் வழி கழிவுகளை ஆற்றில் கொட்டியிருக்கலாம் என ஜோகூர் DOE துணை இயக்குநர் முகமட் ரஷ்தான் தோபா (Mohd Rashdan Topa) தெரிவித்தார்.

இதனால், சுங்கை பாண்டன் நதிக்கரையோரம் உள்ள சுமார் 100 தொழிற்சாலைகளில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

அதுமட்டுமல்லாமல், சுங்கை பாண்டனின் நீர் மேற்பரப்பில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கறுப்பு நிறத்தில் இரசாயனம் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் எண்ணெய் திரவியத்தையும் கண்டறிந்தது.

இந்நிலையில், அந்த இடத்தின் மண் மற்றும் நதி நீர் மாதிரி ஆய்வுக்காக வேதியியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் விரிவான விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மாநில சுகாதாரத் துறையின் தகவலின் அடிப்படையில், குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் அறிகுறிகளை அனுபவித்த பொதுமக்களில் இருவர் மட்டுமே இதுவரை வெளிநோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!