Latestமலேசியா

சுங்கை பூலோ வாய்க்காலில் சந்தேகத்திற்குரிய 8 இரசாயன கழிவு பீப்பாய்கள் கண்டுபிடிப்பு

கோலாலம்பூர், செப்டம்பர் 27 – இரசாயனக் கழிவுகள் என நம்பப்படும் திரவம் கொண்ட 8 பீப்பாய்கள், கடந்த செவ்வாய்க்கிழமை சுங்கை பூலோவின், கம்போங் டேசா ஆமானிலுள்ள (Kampung Desa Aman) வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இரவு 9 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து, சுங்கை பூலோ தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றதாக, அதன் செயல்பாட்டு உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் (Ahmad Mukhlis Mokhtar) கூறினார்.

அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்வதற்கு முன்னதாக, சுற்றுச்சூழல் துறையின் வடிகால் மாதிரிகளின் மதிப்பீட்டிற்காகக் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தொடர்ந்து, அந்த இடத்தைக் கண்காணித்து வருவதாகவும், கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!